NATIONAL

நஷ்டஈடு பெற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே விபத்து  ஏற்படுத்திய நபர் – காவல்துறையினர் வலைவீச்சு

11 மார்ச் 2024, 4:50 AM
நஷ்டஈடு பெற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே விபத்து   ஏற்படுத்திய நபர் – காவல்துறையினர் வலைவீச்சு

ஜார்ஜ் டவுன், மார்ச் 11: நஷ்டஈடு பெற வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே விபத்து ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர், இச்சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று முதல் வைரலாகப் பரவி வருகிறது.

விசாரணையின் அடிப்படையில், ஜோர்ஜ் டவுன், ஜாலான் மஸ்ஜிட் நெகிரி, தாமான் துன் சர்டோன் மற்றும் புக்கிட் கம்பீர் ஆகிய இடங்களில் அவர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளதாக வடகிழக்கு மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துட் ஹமீட் தெரிவித்தார்.

அந்நபர் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினருக்கு புகார்  கிடைத்துள்ளது. மேலும், சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான மேல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகவல் தெரிந்த பொதுமக்கள் எங்களிடம் தெரிவிக்கலாம். மேலும், தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.