கோலாலம்பூர், மார்ச் 11 - பிப்ரவரி 29, 2024 நிலவரப்படி பேங்க் நெகாரா மலேசியாவின் (பிஎன்எம்) சர்வதேச கையிருப்பு 114.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இக்கையிருப்பு நிலை, 5.4 மாதங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்வதற்குப் போதுமானது என்றும் மொத்த குறுகிய கால வெளிநாட்டு கடனை விட 1.0 மடங்கு அதிகம் என்றும் மத்திய வங்கி கூறியது.
கையிருப்புகளின் முக்கிய கூறுகள் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் 101.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன. அதைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதிய கையிருப்பு (US$1.4 பில்லியன்), சிறப்பு உரிமைகள் (SDRs) (US$5.8 பில்லியன்), தங்கம் (US$2.6 பில்லியன்) மற்றும் பிற இருப்பு சொத்துக்கள் (US$2.7 பில்லியன்) ஆகும்.
தங்கம், அந்நிய பரிமாற்றம் மற்றும் SDRகள் (RM524.44 பில்லியன்), மலேசிய அரசாங்க கடன் பத்திரங்கள் (RM13.0 பில்லியன்), நிதி நிறுவனங்களுடனான வைப்புத்தொகை (RM2.41 பில்லியன்), முன்பணம் (RM24.51 பில்லியன்), நிலம் மற்றும் கட்டிடங்கள் (RM4.13 பில்லியன்), மற்றும் பிற சொத்துக்கள் (RM60.68 பில்லியன்) கடன்கள் மற்றும் பிற இருப்புக்களை உள்ளடக்கிய மொத்த சொத்துக்கள் RM629.17 பில்லியன்களாக உள்ளன.
மேலும், மூலதனம் மற்றும் பொறுப்புகள் செலுத்தப்பட்ட மூலதனம் (RM100.0 மில்லியன்), இருப்புக்கள் (RM187.42 பில்லியன்), புழக்கத்தில் உள்ள நாணயம் (RM167.37 பில்லியன்), நிதி நிறுவனங்களின் வைப்புத்தொகை (RM169.44 பில்லியன்), மத்திய அரசு வைப்புக்கள் (RM4.24 பில்லியன்) மற்றும் பிற வைப்புத் தொகைகள் (RM39.65 பில்லியன்), பேங்க் நெகாரா ஆவணங்கள் (RM27.47 பில்லியன்), SDRகளின் ஒதுக்கீடு (RM29.74 பில்லியன்), மற்றும் பிற கடன்கள் (RM3.75 பில்லியன்) ஆகும் என பிஎன்எம் தெரிவித்தது.
- பெர்னாமா




