NATIONAL

 மருத்துவமனைக்கு அருகே புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம்

11 மார்ச் 2024, 2:51 AM
 மருத்துவமனைக்கு அருகே புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம்

ஈப்போ, மார்ச் 11: ஶ்ரீ இஸ்கண்டாரில் உள்ள ஶ்ரீ இஸ்கண்டார்  மருத்துவமனை கட்டுமானப் பகுதிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பிற்பகல் 3.15 மணிக்குக் காவல்துறையினர் தகவல் அறிவதற்கு முன், குழந்தையின் உடலை பொதுமக்கள் கண்டெடுத்ததாக மத்திய பேராக் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஹஃபீசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்தார்.

தொப்புள் கொடி வெட்டப்பட்ட நிலையில் குழந்தையின் உடல் ஆடையின்றி  காணப்பட்டதாகவும் மற்றும் பள்ளத்தில் மூழ்கியதாகவும் அவர் கூறினார்.

"குழந்தையின் உடலின் ஆரம்பப் பரிசோதனையின் முடிவுவில் வெளிப்புற காயங்களுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது, மேலும் குற்றவியல் சட்டப் பிரிவு 318 இன் கீழ் விசாரணைகள் இன்னும் நடத்தப்படுகின்றன.

"குழந்தையின் உடல் சாங்கட் மெலிந்தாங் மருத்துவமனைக்கு (HCM) அனுப்பப்பட்டது மற்றும் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் (HRPB) தடயவியல் மருத்துவ நிபுணர்கள் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை செய்தார்கள்" என்று அவர் அறிக்கையில் ஒன்றில் தெரிவித்தார்.

இவ்வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி முகமட் துல்கர்னைன் ஜூசோவை 013-9740294 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.