செய்தி. சு.சுப்பையா
கிள்ளான்.மார்ச்.10-
உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தை ஒட்டி செந்தோசா சட்டமன்ற தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு முகாமைத் தலைமை ஏற்று நடத்திய பின்னர் டாக்டர் உமாராணி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்தக் கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி முகாம் உலக மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்டது. அதே நிகழ்வில் உலக மகளிர் தினமும் கொண்டாடப் பட்டது.
இந்தத் தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்த மகளிர்கள் ஒன்று கூடிக் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
ஏற்பாட்டுக் குழுவினர் அனைவரும் ஊதா வண்ணத்தில் உடை அணிந்திருந்தனர். ஊதா வர்ணம் மகளிருக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கேக் வெட்டும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் அலுவலக அதிகாரிகளும் உடன் கலந்து சிறப்பித்தனர்.








