NATIONAL

வழக்கமான சேமிப்புகளுக்கு 5.50 சதவிகித லாப ஈவுத்தொகை - ஊழியர் சேமநிதி வாரியம்

8 மார்ச் 2024, 1:08 PM
வழக்கமான சேமிப்புகளுக்கு 5.50 சதவிகித லாப ஈவுத்தொகை - ஊழியர் சேமநிதி வாரியம்

கோலாலம்பூர், மார்ச் 8: ஊழியர் சேமநிதி வாரியம் வழக்கமான சேமிப்புகளுக்கு 5.50 சதவிகித லாப ஈவுத்தொகையை அறிவித்தது. அதன் மொத்த விநியோகம் RM50.33 பில்லியன் ஆகும்.

ஷரியா சேமிப்புக்கான 5.40 சதவீத லாப ஈவுத்தொகையை ஊழியர் சேமநிதி வாரியம் அறிவித்தது. இதன் மொத்த விநியோகமான RM7.48 பில்லியன் ரிங்கிட், 2023 ஆண்டுக்கான மொத்த வருமான விநியோகம் RM57.81 பில்லியனுக்கு வழிவகுத்தது.

டிசம்பர் 31, 2023 இல்,  மொத்த முதலீட்டு வருமானம் RM66.99 பில்லியனை ஊழியர் சேமநிதி வாரியம் பதிவு செய்துள்ளது. இது 2022 இல் பதிவு செய்யப்பட்ட RM51.91 பில்லியனைக் காட்டிலும் 29 சதவீதம் அதிகமாகும்.

"ஊழியர் சேமநிதி வாரியம், லாப ஈவுத் தொகையைப் பெறப்பட்ட வருமானத்திலிருந்து மட்டுமே வழங்குவது ஒரு விவேகமான நடைமுறையாகும்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.