கோலாலம்பூர், மார்ச் 8 - அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறுவது தவறானது என்று பார்ட்டி கெ அடிலான் ராக்யாட் துணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமட் கூறினார்.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராகவும் இருக்கும் நிக் நஸ்மி, அரசு ஊழியர்களின் ஊதியத்தை மறுபரிசீலனை செய்வதற்கான முன்மொழிவு தற்போதுள்ள ஊழியர்களைப் பாதிக்காததால், மத்திய அரசு ஓய்வூதியம் குறைக்கிறது அல்லது நிறுத்துகிறது என்ற ஹாடியின் கூற்று தவறானது என்றார்.
"உண்மை என்னவென்றால், தற்போது உள்ள அனைத்து அரசு ஊழியர்களின் ஊதியத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முன்மொழிகிறது மற்றும் தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து, ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) போன்ற புதிய ஓய்வூதியத் திட்டத்துடன் புதிய அரசு ஊழியர்களை பணி அமர்த்துவதற்கான விருப்பங்களை ஆராய்கிறது.
"மத அறிவு கொண்ட நபர் என்ற முறையில், மத்திய அரசின் முன்மொழிவை துல்லியமாகப் பிரதிநிதித்துவப் படுத்தாத அறிவீனமான அறிக்கைகளை ஹாடி வெளியிடக்கூடாது" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 24 அன்று, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, தற்போதுள்ள அரசு ஊழியர் ஓய்வூதியங்களின் நிலை 'நிரந்தர ஓய்வூதியமாக' தொடரும். புதிய ஊழியர்களுக்கு மட்டுமே புதிய கொள்கை அறிமுகப் படுத்தப் படும் என்றார்.
அது குறித்த விவரங்கள் பொது சேவைத் துறையின் தலைமை இயக்குனரால் பின்னர் அறிவிக்கப் படும் என்றார்.
இஸ்லாமிய சமய கூறுகளை உள்ளடக்கிய முதலீட்டு அம்சங்களை கொண்ட ஈபிஎஃப் பங்களிப்புகளை இஸ்லாம் இல்லாததாக சித்தரிக்க ஹடி முயன்று வருகிறார் என்றும் நிக் நஸ்மி கூறினார்.
ஓய்வூதிய முறையை இபிஎப் பங்களிப்புகளுடன் மாற்றுவதற்கான முன்மொழிவு 2022 இல் கிளந்தான் மாநில அரசு நிறுவனமான யாயாசான் இஸ்லாம் கிளந்தான் (YIK) மூலம் ஏற்கனவே அறிவிக்கப் பட்டது அப்பொழுது அவர்களுக்கு அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானதாக தெரிய வில்லையா என வினாவினார் ?
"அப்படியானால், ``YIK`` இந்த முன்மொழிவை அறிவித்தபோது, இபிஎப் இஸ்லாமியம் அல்ல அல்லது முஹம்மது நபியின் போதனைகளைப் பின்பற்றவில்லை என்று பாஸ் ஏன் எதிர்க்கவில்லை?" என நிக் நஸ்மி கேட்டார்.
- பெர்னாமா




