கோலாலம்பூர், மார்ச் 8 - அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்கள் நிலையிலும் மாற்றங்களைச் செய்ய மலேசியா துணிய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இப்போது தொடங்கி நாட்டை உயர்நிலைக்குக் கொண்டு வந்து மேம்பாடு செய்வதில் அனைத்து மலேசியர்களுக்கும் பங்கும் பொறுப்பும் உள்ளது என்றார் அவர் சொன்னார்.
எந்த மொழி பேசினாலும் இன, கலாச்சாரங்கள் மற்றும் சமயங்களின் பன்முகத்தன்மையை மதிக்கும் அதே வேளையில் மலேசியாவின் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் உயர்த்துவதில் நமக்கு உள்ள பங்கை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
தற்போது கடமையில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டக்களத்தில் உள்ளவர்கள் மற்றும் உலக அரங்கில் நாட்டின் பெயரைச் செதுக்கப் பாடுபடுபவர்களுக்கு ஒரு வார்த்தை, இந்த உன்னத முயற்சியைத் தொடருங்கள் என்றார் அவர்.
தேசத்தின் வாரிசுகளுக்காவும் கொள்ளுப் பேரக்குழந்தைகளுக்காகவும் நாட்டை மேன்மைப்படுத்தவும் பெருமைப்படகூடியதாகவும் உயர்த்துமாறு அனைத்து மலேசியர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.




