ஷா ஆலம், மார்ச் 8: பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் அதன் செயல்பாட்டுத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்த பின் ஆண்டுக்கு RM200 மில்லியன் வரை வருவாய் ஈட்ட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தண்ணீர் கட்டணம் உயர்வு, பழைய குழாய் மாற்றுத் திட்டத்தின் வழி கடனில் இருந்து மீண்டும் லாபம் ஈட்டுவது போன்றவைகள் அடங்கும் என்றார் டத்தோ மந்திரி புசார் கூறினார்.
"மேலும், முன்மொழியப்பட்ட கட்டண அதிகரிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது உட்பட திட்டமிடல் நடவடிக்கை மறுசீரமைப்பு பிறகு, அந்நிறுவனம் ஆண்டுக்கு RM200 மில்லியன் வரை வருமானம் ஈட்ட முடியும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
"உலு கிளாங் (டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி) மந்திரி புசாராக இருந்தபோது அவர் ஏற்பட்ட அனைத்து கடன் மற்றும் மேம்பாடு செலவுகளும் 2031 ஆம் ஆண்டு முதல் ஆயர் சிலாங்கூர் மற்றும் பெங்குருசன் அசெட் ஆயர் பெர்ஹாட் ஆகியவையால் கான்ட்ராஸ்ட் மூலம் (RM55 மில்லியன்) திருப்பிச் செலுத்தப்படும்.
ஆண்டுக்கு 150 கிலோ மீட்டரிலிருந்து சமீபத்தில், ஆண்டுக்கு 300 கிலோ மீட்டராக தண்ணீர் குழாய்களை மாற்றுவதாகவும், தொடர்ந்து 2034 முதல் ஆண்டுக்கு 400 கிலோ மீட்டராகவும் உயர்த்தப் போவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய தண்ணீர் கட்டண திட்டத்தை தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.




