NATIONAL

12 வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் மரணம்

8 மார்ச் 2024, 3:53 AM
12 வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 8: நேற்று மதியம் செரஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

அச்சிறுவன் பிற்பகல் 1.52 மணி அளவில் குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியின் கீழ் உள்ள புற்கள் மீது மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார் என செரஸ் மாவட்ட காவல்துறையின் துணைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ரிட்ஜுவான் காலிட் கூறினார்.

காவல்துறை படையுடன் சம்பவ இடத்திற்கு வந்த சென்ஸ்லர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் (எச்.சி.டி.எம்) மருத்துவ குழு பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.

"முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் குற்றவியல் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப் பட்டுள்ளதாகவும்" அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான மேல் விசாரணைகள் தொடரும் என்றும், சம்பவம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள், 03-9205 0301 நீட்டிப்பு 302 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ரிட்சுவான் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.