ஷா ஆலம், மார்ச் 8: கூட்இயர் டயர் தயாரிப்பு நிறுவனம் இம்மாநிலத்தில் உள்ள அதன் தொழிற்சாலைகளை மூடுவது மட்டுமின்றி, கடந்த ஆண்டு ஓஹியோ, அமெரிக்காவிலும் அதன் செயல்பாட்டை நிறுத்தியது.
தனது மதிப்பாய்வின் முடிவுகளில் அந்நிறுவனம் 2023ஆம் ஆண்டில் மறுசீரமைப்பை மேற்கொண்டதாகவும், இது கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள 1,200 ஊழியர்களை பாதித்ததாகவும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிட முடியாமல் அந்நிறுவனம் தங்கள் வணிகத்தை மறுசீரமைத்தல் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
"கூட்இயரின் முழு அறிக்கையையும் நான் ஆண்டு வாரியாக படித்தேன். தொழிலாளர்களுக்கான செலவுகள் அதிகரிப்பின் காரணமாக அவை மூடப்பட்டு எவ்வாறு மறுகட்டமைப்பு செய்யப் படுகின்றன (செயல்பாடுகள்) என்று நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் கூறினார்.
கூட்இயர் நிறுவனம் ஷா ஆலமில் உள்ள அதன் தொழில்சாலையின் செயல்பாட்டை மூட முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 550 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.




