NATIONAL

தீ விபத்தில் 45 வீடுகள் எரிந்து நாசமாகின

7 மார்ச் 2024, 10:00 AM
தீ விபத்தில் 45 வீடுகள் எரிந்து நாசமாகின

தவாவ், மார்ச் 7: நேற்று மதியம் கம்போங் தஞ்சோங் பத்து லாவுட் லோக்போண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தண்ணீர் மேல் கட்டப்பட்ட 45 வீடுகள் எரிந்து நாசமாகின.

தீ ஏற்பட்ட பகுதியின் பரப்பளவு 9,000 சதுர மீட்டர் ஆகும் என தவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) தலைவர் ஜெமிஷின் உஜின் கூறினார்.

"பிபிபி தவாவுக்குப் பிற்பகல் 2.31 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் அவ்விடத்திலிருந்து 4.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு 44 அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இயந்திரங்களுடன் விரைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

மாலை 4.31 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்பின் மதிப்பு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், முதற்கட்ட விசாரணையில் 180 பேர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜெமிஷின் தெரிவித்தார்.

"இந்த கிராமத்தில் சுமார் 300 வீடுகள் உள்ளன. தீ வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப் பட்டாலும், தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கையாக நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்," என்று அவர் மேலும் விளக்கினார்.

தேவையற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்டவர்கள், கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவம் நடந்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.