NATIONAL

தீ விபத்தில் 286 பேர் பாதிப்பு; இரண்டு பிபிஎஸ்கள் திறக்கப்பட்டுள்ளன

7 மார்ச் 2024, 7:29 AM
தீ விபத்தில் 286 பேர் பாதிப்பு; இரண்டு பிபிஎஸ்கள் திறக்கப்பட்டுள்ளன

தவாவ், மார்ச் 7: இன்று காலை 8 மணி நிலவரப்படி, கம்போங் தஞ்சோங் பத்து லாவுட்

லோக்போண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 81 குடும்பங்களைச் சேர்ந்த

மொத்தம் 286 பேர் தவாவ் பல்நோக்கு விளையாட்டு மண்டபத்தில் உள்ள தற்காலிகத்

தங்கும் மையத்திற்கு (பிபிஎஸ்) மாற்றப்பட்டனர்.

மேலும், OT முகமட் ஜந்தான் தஞ்சோங் பத்து டாராட் மண்டபத்தில் மற்றொரு பிபிஎஸ்

திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தங்க

வைக்கப் படவில்லை என சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்)

செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த இரண்டு பிபிஎஸ்களும் நேற்றிரவு 8 மணியளவில் திறக்கப்பட்டன.

அதுமட்டுமில்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று

எதிர்பார்க்கப் படுகிறது என அறிக்கை கூறுகிறது.

நேற்று மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 45 வீடுகள் எரிந்து

நாசமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.