NATIONAL

பாலிங் மலை ஏறி ஒருவர் மரணமடைந்தார்

6 மார்ச் 2024, 12:55 PM
பாலிங் மலை ஏறி ஒருவர் மரணமடைந்தார்

பாலிங், மார்ச் 6: நேற்று காலை 39 வயதுடைய ஒருவர் பாலிங் மலையில் ஏறும் போது இறந்தார்.

மலையில் மயங்கிய நிலையில் இருந்த பாதிக்கப்பட்டவர் குறித்து தனது தரப்புக்கு மதியம் 12.13 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமட் ஜமில் மாட் டாவுட் கூறினார்.

"அந்நபர் தனது நண்பர்களுடன் மலை ஏறிய பின்னர் சுயநினைவின்றி இருப்பதாக முதற்கட்ட தகவல் கிடைத்தது. மேலும், பாதிக்கப் பட்டவரைக் கண்டுபிடிக்க தீயணைப்பு வீரர்கள் மலையில் ஏறினர்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தீயணைப்புத் துறையினர் பாதிக்கப்பட்டவரை மலையின் அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். ஆனால், அந்நபர் இறந்துவிட்டதாகச் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

பின்னர், மேல் நடவடிக்கைக்காக உயிரிழந்தவரின் சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.