NATIONAL

கொலை குற்றத்திற்காக ஆறாம் படிவம் மாணவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை

6 மார்ச் 2024, 12:53 PM
கொலை குற்றத்திற்காக ஆறாம் படிவம் மாணவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை

கோலா திரங்கானு, மார்ச் 6: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தனது நண்பரைக் கொன்ற குற்றத்திற்காக, முன்னாள் ஆறாம் படிவம் மாணவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்ட சிதி நூர் அதிரா ஆஸ்மி (23), சித்தி நூர் சூர்யா இஸ்மாயிலை (19) கொன்றதாகக் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிபதி டத்தோ ஹாசன் அப்துல் கானி இவ்வாறு தீர்ப்பளித்தார்.

மேலும், 2020 நவம்பர் 2ஆம் தேதி முதல் சிறை தண்டனையை தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நவம்பர் 1 2020 அன்று, காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை கம்போங் லுபுக் பத்து, ஜாலான் புக்கிட் தடோக், தெலிமோங், உலு திரங்கானுவில் உள்ள பாதிக்கப் பட்டவரின் வீட்டில் சித்தி நோர் அதிரா சித்தி நோர் சூர்யாவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12 தடியடிகள் ஆகியவற்றை வழங்கும் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இக்குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், கட்டாய மரண தண்டனை ஒழிப்புச் சட்டம் 2023 இன் கீழ் சமீபத்திய திருத்தத்தைத் தொடர்ந்து நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சிறைத்தண்டனை விதித்தது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.