NATIONAL

செம்பனை எண்ணெய் சர்ச்சை- ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான மலேசியாவின் புகார் தள்ளுபடி

6 மார்ச் 2024, 4:57 AM
செம்பனை எண்ணெய் சர்ச்சை- ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான மலேசியாவின் புகார் தள்ளுபடி

ஜெனீவா, மார்ச் 6- செம்பனை எண்ணெய் அடிப்படையிலான உயிரியல் எரிபொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு எதிராக மலேசியா செய்த புகார் உலக வர்த்தக அமைப்பில் தோல்வியடைந்ததாக டி.பி.ஏ.  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்துத் துறைகளில்  உறுப்பு நாடுகள்  பயன்படுத்த வேண்டிய குறைந்தபட்ச புதுப்பிக்கத்தக்க எரிபொருட்கள் குறித்த விதிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் 2018 ஆம் ஆண்டு வெளியிட்டது.

நடவு செய்வதற்காக காடுகள்  அழிக்கப்பட்ட உயிரியல்  எரிபொருளை இலக்கை அடைய பயன்படுத்த முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனை முதன்மையாகச் செம்பனை  பயிர்களை இலக்காக கொண்டிருந்தது.

இந்த நடவடிக்கை நியாயமான வர்த்தக நடைமுறைகளை மீறுவதாகக்  உள்ளது என குற்றஞ்சாட்டிய பெரிய செம்பனை உற்பத்தித் தொழில் துறையைக் கொண்ட  நாடான மலேசியா, கடந்த   2021ஆம் ஆண்டு ஐரோப்பிய வர்த்தக  நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தது.

கடந்த செவ்வாயன்று வழங்கப்பட்ட தீர்ப்பில்  விதிமுறைகளின் வடிவமைப்பை  விசாரணைக் குழு விமர்சித்த போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டை அது ஆதரித்தது.

குழுவில் இருந்த ஒருவர் மற்றவர்களின் நிலைப்பாட்டிலிருந்து  வேறுபட்டு மலேசியாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மலேசியா மேல் முறையீடு செய்யலாம். இருப்பினும், நிறுவனத்தின் தகராறு தீர்வு செயல்முறைக்கான சீர்திருத்தங்கள் மீதான சர்ச்சையின் காரணமாக அந்த அமைப்பின்  மேல்முறையீட்டு அமர்வு கடந்த  நான்கு ஆண்டுகளாகக் காலியாக உள்ளது.  இதனால், மேல்முறையீடு செய்யப்படும்  வழக்குகள் கிடப்பில் போடப்படுகின்றன.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.