NATIONAL

மக்கள் சொந்த வீட்டைப் பெறுவதற்கு ஏதுவாக மேலும் அதிக சிலாங்கூர் கூ வீடுகள்- மந்திரி புசார் தகவல்

5 மார்ச் 2024, 7:37 AM
மக்கள் சொந்த வீட்டைப் பெறுவதற்கு ஏதுவாக மேலும் அதிக சிலாங்கூர் கூ வீடுகள்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், மார்ச் 5 - மாநிலத்தில் 100,000க்கும் மேற்பட்ட பல்வேறு

வகையான சிலாங்கூர் கூ வீடுகளை நிர்மாணிப்பதற்கு மாநில அரசு

அண்மைய ஆண்டுகளில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அவற்றில் 70,000 வீடுகள் திட்டமிடல் அனுமதிக்காகக் காத்திருக்கும்

வேளையில் எஞ்சிய வீடுகள் கட்டுமானத்தில் உள்ளதாக மந்திரி புசார்

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்வாண்டு தொடங்கி வரும் 2026 வரை மேலும் அதிகமான வீடமைப்புத்

திட்டங்கள் முழுமை பெறவுள்ளன. அவற்றில் ரூமா இடாமான்( பண்டார்

சவுஜானா புத்ரா) திட்டமும் ஒன்றாகும். இத்திட்ட வீடுகள் அதன்

உரிமையாளர்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும். அலட்சியப் போக்கு

கொண்ட மேம்பாட்டாளரிடமிருந்து இத்திட்டம் கையகப்படுத்தப்பட்டது

என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

கடந்த 2018 முதல் கடந்தாண்டு வரை சிலாங்கூர் கூ வீடுகளுக்கு 187,243

விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக கூறிய அவர், அவற்றில் 42,238

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேளையில் எஞ்சிய 115,095

விண்ணப்பங்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

அதே காலக்கட்டத்தில் 95 வீடமைப்புத் திட்டங்களை உள்ளடக்கிய 30,327

வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடன் விண்ணப்பம்

அங்கீகரிக்கப்படாதது அல்லது விண்ணப்பங்கள் முறையாக இல்லாதது

ஆகிய காரணங்களால் 29,910 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்றார்

அவர்.

கடந்த 2014 முதல் கடந்தாண்டு வரை சிலாங்கூர் மாநில வீடமைப்பு

மற்றும் சொத்துடைமை வாரியம், அரசு துணை நிறுவனங்கள் மற்றும்

தனியார் துறையின் ஒத்துழைப்புடன் 245,371 வீடுகளுக்கு மாநில அரசு

அங்கீகாரம் வழங்கியது என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.