NATIONAL

மக்கள் 2.7 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த அக்ரோ மடாணி விற்பனைத் திட்டம் உதவி

5 மார்ச் 2024, 6:14 AM
மக்கள் 2.7 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த அக்ரோ மடாணி விற்பனைத் திட்டம் உதவி

ஷா ஆலம், மார்ச் 5 -  கடந்தாண்டு நாட்டு மக்கள் 2 கோடியே 78 லட்சம்

வெள்ளியை மிச்சப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அக்ரோ மடாணி

விற்பனைத் திட்டம் உதவியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 16 லட்சம் குடும்பங்கள்

பயனடைந்ததாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத துணையமைச்சர்

டத்தோ ஆர்தர் ஜோசப் குருப் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நடத்தப்பட்ட 5,608 அக்ரோ

மடாணி மலிவு விற்பனைகளில் 29 லட்சம் பேர் கலந்து கொண்டு

பயனடைந்துள்ளனர்.

அதோடு மட்டுமின்றி 74,800 தொழில்முனைவோரை உள்ளடக்கிய இந்த

விற்பனைத் திட்டத்தின் வாயிலாக 9 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம்

வெள்ளி மதிப்புள்ள வர்த்தகம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

மக்களவையில் இன்று செம்புரோங் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ

ஹிஷாமுடின் துன் ஹூசேன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்

அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கையாள்வதற்கும் மக்களுக்குப்

போதுமான அளவு உணவு விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வதற்கும்

அரசாங்கம் காட்டி வரும் அக்கறையை இந்த அக்ரோ மடாணி விற்பனைத்

திட்ட அமலாக்கம் புலப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் நாடு முழுவதும் சுமார் 5,000 அக்ரோ மடாணி மலிவு விற்பனைகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.