NATIONAL

அதிக அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகப் பல்வேறு நிதி அல்லாத சலுகைகள் அறிமுகம்

5 மார்ச் 2024, 5:59 AM
அதிக அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகப் பல்வேறு நிதி அல்லாத சலுகைகள் அறிமுகம்

ஷா ஆலம், மார்ச் 5: மாநிலத்திற்கு அதிக அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக பல்வேறு நிதி அல்லாத சலுகைகள் மாநில நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றன என்று முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்நடவடிக்கை தேவையான ஆதரவுடன் முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் விரைவு படுத்த உதவும் மற்றும் வளர்ச்சி ஒப்புதல்கள் ஒருங்கிணைப்பது இதில் அடங்கும் என்றார்.

"இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்வதற்கு முன், சாத்தியமான உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இணை-பணிபுரியும் இடத்தை வழங்கப்படும். இதனால் அவர்கள் இங்குள்ள முதலீட்டு சூழலை ஆராய முடியும்.

"இந்த வசதி முக்கியமானது மற்றும் தேவையான ஆதரவுடன் திட்டத்தை விரைவுபடுத்த நேரடியாக உதவுகிறது. இதனால் புதிய முதலீட்டாளர்களின் ஆரம்ப செலவைக் குறைக்க உதவுகிறது," என்று அவர் கூறினார்.

இன்று மாநில சட்டமன்ற அமர்வில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த  ஸீ  ஹான், ஆராய்ச்சி மற்றும் பொருட்களின் தயாரிப்பு மேம்பாட்டிற்கான செலவைக் குறைக்க ஆய்வகப் பகிர்வு திட்டத்தையும் அரசு உருவாக்கியுள்ளது என்றார்.

உள்ளூர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதோடு, தொழில்துறை சேர்ந்தவர்கள்  வசதிகள் மற்றும் நிபுணத்துவ வளங்களைப் பெறுவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது.

"இது புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும், அத்துடன் வாழ்க்கை அறிவியல் துறையில் தொழில்துறை சேர்ந்தவர்களுடன் நெருங்கிய உறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.