NATIONAL

மலேசிய கடல்சார் நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது- விமானி, பயணிகள் உயிர்த்தப்பினர்

5 மார்ச் 2024, 4:46 AM
மலேசிய கடல்சார் நிறுவன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது- விமானி, பயணிகள் உயிர்த்தப்பினர்

ஷா ஆலம், மார்ச் 5 - மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்திற்குச்

சொந்தமான ஏ.டபள்யூ.139 ஹெலிகாப்டர் பூலாவ் அங்காசா அருகே ஐந்து

கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது.

இன்று காலை 10.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் விமானி

உள்ளிட்ட நான்கு பயணிகள் உயிர்தப்பினர்.

கிள்ளான் கடல் பகுதியில் ஆகாய மார்க்கமாக கண்காணிப்பு பணியை

மேற்கொண்டிருந்த போது அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக

ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களைக்

காப்பாற்றுவதற்காகக் கடல் சார் அமலாக்க நிறுவத்தின் அதிகாரிகளும்

உறுப்பினர்களும் விரைந்து கொண்டிருப்பதாக அது தெரிவித்தது.

இதனிடையே, இந்த விபத்து நிகழ்ந்ததைச் சிலாங்கூர் மாநில போலீஸ்

தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் சினார் ஹரியான்

பத்திரிகையிடம் உறுதிப்படுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.