NATIONAL

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நில உரிமையை வழங்க சிறப்புக் குழு ஏற்பாடு

5 மார்ச் 2024, 2:20 AM
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நில உரிமையை வழங்க சிறப்புக் குழு ஏற்பாடு

ஷா ஆலம், மார்ச் 5: வீட்டு வசதி மற்றும் நில உரிமையை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்குவதற்காக மாநில அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்று வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா தெரிவித்தார்.

"சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியத்தின் (LPHS) பதிவேடுகளைக் குறிப்பிடுகையில், சில அடுக்குமாடி குடியிருப்புகள் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப் பட்டிருந்தாலும் இன்னும் அதற்கான உரிமையைப் பெறவில்லை.

"இந்தப் பிரச்சனை அடுக்குமாடி உரிமையாளர்கள் எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்வதற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், சிக்கலைத் தீர்க்க மாநில அரசு ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது," என்று அவர் கூறினார்.

நேற்று சிலாங்கூர் மாநில சட்டசபையில், சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஆற்றிய உரையின் நிறைவு அமர்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, 2024 பட்ஜெட்டில் 1.5 மில்லியன் நில உரிமைகள் மற்றும் 800,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகளுடன் அதிக சொத்து உரிமைகள் கொண்ட மாநிலமாகச் சிலாங்கூர் திகழ்கிறது என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.