NATIONAL

ஜெலாஜா ஜாப்கேர் மூலம் சிலாங்கூர் மக்களுக்குச் சுமார் 35,000 வேலை வாய்ப்புகள்

5 மார்ச் 2024, 2:15 AM
ஜெலாஜா ஜாப்கேர் மூலம் சிலாங்கூர் மக்களுக்குச் சுமார் 35,000 வேலை வாய்ப்புகள்

ஷா ஆலம், மார்ச் 5 - கடந்த ஆண்டு ஜெலாஜா ஜாப்கேர் மூலம் சிலாங்கூர் மக்களுக்குச் சுமார் 35,000 வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி பாப்பாராய்டு தெரிவித்தார்.

முதலாளிகள் வழங்கும் பல்வேறு துறைகளில் இருந்து பொருத்தமான வேலைகளைப் பெற பொதுமக்களுக்கு இத்திட்டம் உதவுகிறது என்று வி பாப்பாராய்டு கூறினார்.

“ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக நல அமைப்பு (சொக்சோ) மற்றும் சிலாங்கூர் ஊழியர் பிரிவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்டது.

"வேலை காலியிடங்கள் நிரப்புவதன் மூலம் வேலை தேடுபவர்கள் தங்கள் திறனை ஆராய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்" என்று அவர் கூறினார்.

தேசிய தொழிலாளர் சந்தையில் திறமையான, உற்பத்தி திறன், மற்றும் செயல்திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்க மனிதவள நிலைக்குழுவின் பங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார் பாப்பா ராய்டு.

"இந்த திட்டம் சிலாங்கூர் மக்களின், குறிப்பாக முதியவர்கள், ஒற்றைத் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் குற்றவாளிகள் என பாதிக்கப்படக்கூடிய நபர்களின் வேலைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதோடு, வேலையின் தரம் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும்" என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.