புது டில்லி, மார்ச் 5 - பாகிஸ்தானுக்கு வருகை புரியும்படி அந்நாட்டு
பிரதமர் ஷேபாஷ் ஷாரிப் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரு நாட்டு உறவுகளை மேலும்
வலுப்படுத்துவது தொடர்பில் இரு தலைவர்களும் நடத்திய தொலைபேசி
உரையாடலின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
பாகிஸ்தானின் 24வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி
தெரிவிப்பதற்காகப் பிரதமர் அன்வார் நேற்று அந்நாட்டு பிரதமர் ஷாபேஷ்
ஷாரிப்பைத் தொடர்பு கொண்டார்.
இந்த உரையாடலின் போது பாகிஸ்தானுக்கு வருகை புரியும்படி பிரதமர்
ஷாபேஷ் அன்வாருக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்
கொண்ட அன்வார், மலேசியாவுக்கு வருகை தருமாறு ஷாபேஷ்க்கு
அழைப்பு விடுத்தார் என்று ஏஷோஷியேட் பிரஸ் ஆப் பாகிஸ்தான் (ஏபிபி)
கூறியது.
இரு தரப்பு உறவுகள் தவிர்த்து, காஸா நிலவரம் குறித்தும் இரு
தலைவர்களும் விவாதித்ததாக ஏபிபி. தெரிவித்தது.
நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதிலும் அரசியல்
பதற்றத்தைத் தணிப்பதிலும் புதிதாக நியமனம் பெற்றுள்ள பிரதமர்
ஷாபேஷ் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் தேர்தலில்
நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப்
பெறவில்லை.
பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஷாபேஷ்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்றார்.




