NATIONAL

இரயில் மோதி மூவர் மரணம்

4 மார்ச் 2024, 9:50 AM
இரயில் மோதி மூவர் மரணம்

ஷா ஆலம், மார்ச் 4: நேற்று இரவு, தாமான் புஞ்சாக் உத்தாமா ஜேட் ஹில் பகுதியில்  கேடிஎம்பி ட்ராக்கில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் மூன்று பேர் இரயில் மோதி இறந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மூன்று பேரும் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ ஊழியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது, ஆனால் அவர்களின் அடையாளம் காணப்படவில்லை என தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பெரிட்டா ஹரியான் அறிக்கையை மேற்கோள் காட்டி, பிபிபி காஜாங் தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஐந்து பேர் இரவு 10.53 மணி அளவில் இச்சம்பவம் குறித்து அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்களும் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.