NATIONAL

சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது

4 மார்ச் 2024, 3:49 AM
சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது

கூச்சிங், மார்ச் 4: நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 351 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,361 பேர் 12 தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்கியுள்ளனர்.

சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) அறிக்கையின் அடிப்படையில், நேற்று காலை 14 பிபிஎஸ்ஸில் 392 குடும்பங்களைச் சேர்ந்த 1,497 பேருடன் ஒப்பிடும்போது வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது

கூச்சிங், பாவ், செரியன் மற்றும் சிபுரான் ஆகிய பகுதிகளில் மொத்தம் 12 பிபிஎஸ்கள் செயலில் உள்ளன.

நேற்று இரவு 8 மணிக்குப் பிபிஎஸ் பாசிர் தெங்கா, லுண்டு தேசிய பள்ளி மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.