NATIONAL

பாலஸ்தீன நெருக்கடி, இணைய மோசடி உள்ளிட்ட விவகாரங்கள் மீது இன்றைய மக்களவையில் விவாதம்

4 மார்ச் 2024, 3:17 AM
பாலஸ்தீன நெருக்கடி, இணைய மோசடி உள்ளிட்ட விவகாரங்கள் மீது இன்றைய மக்களவையில் விவாதம்

கோலாலம்பூர், மார்ச் 4 - பாலஸ்தீனத்தில் மனிதாபிமான நெருக்கடி, இணைய மோசடி செய்பவர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டாளர்களுக்கான குடியுரிமைக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் மீது இன்றைய மக்களவைக் கூட்டத்தில்  கவனம் செலுத்தப்படும்

கேள்வி பதில் அமர்வின் போது, பாலஸ்தீனத்தில் மனிதாபிமான நெருக்கடி தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும்  நடவடிக்கைகள் குறித்து லெடாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் இப்ராஹிம் சைட் நோ வெளியுறவு அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார் என்று நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள உத்தரவுப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இணைய மோசடியில் ஈடுப்பட்டுள்ளவர்களால் கடந்த 2020 முதல் 2023 வரை ஏற்பட்ட இழப்புகள் மற்றும் இதுபோன்ற குற்றங்களை முழுமையாக எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கப்பாளா பத்தாஸ் உறுப்பினர் டாக்டர் சித்தி மஸ்துரா முஹம்மது பிரதமரிடம் கேட்பார்.

கால்பந்தாட்ட விளையாட்டாளர்களுக்கான குடியுரிமைக் கொள்கை குறித்த கேள்வியை தெப்ராவ் உறுப்பினர்  ஜிம்மி புவா வீ சே இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரிடம் தொடுப்பார்.

சமீபத்திய ஆசியக் கோப்பை போட்டியில்  மலேசியாவைப் பிரதிநிதித்து ஆடிய ஆடியதற்காக குடியுரிமை  பெற்ற விளையாட்டாளர்களின் எண்ணிக்கை, கால்பந்தின் தரத்தை மேம்படுத்த மலேசிய கால்பந்து சங்கம்  மேற்கொண்ட முயற்சிகள் குறித்து புவா விளக்கம் கோருவார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.