ECONOMY

சிஜாங்காங் விவசாயப் பொருள் ஏல மையம் - மே மாதம் அரசு திறக்க உள்ளது

3 மார்ச் 2024, 9:58 AM
சிஜாங்காங் விவசாயப் பொருள் ஏல மையம் - மே மாதம் அரசு திறக்க உள்ளது

ஷா ஆலம், மார்ச் 3:  கோலா லங்காட், சிஜாங்காங்கில் விவசாய பொருட்களுக்கான ஏல சந்தை மையத்தை வரும் மே மாதத்திற்குள் மாநில அரசு திறக்கும்.

வேளாண்மை எக்ஸ் கோ ஆர் இஷாம் ஹாஷிம் கூறுகையில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்களை சேகரிக்கும் மையம் தற்போது புதுப்பிக்கும் பணியில் உள்ளது.

"நாங்கள் கொரியா மற்றும் ஜப்பானுக்குச் சென்று வந்த பின் இம்முயற்சியால் ஈர்க்கப் பட்டதாக கூறிய அவர். அங்கே வணிகர்கள் உட்பட அனைத்து நுகர்வோரும் வாங்கக்கூடிய அனைத்து பயிர்களையும் ஒரே மையத்தில் சேகரிக்கின்றனர்.

"நாங்களும் விவசாயிகள் உற்பத்தி செய்வது, சந்தையில் விநியோக மின்றி இடைநிறுத்தப் படுவதை காண விரும்பவில்லை.  இந்த மையம் மூலம், விவசாயிகள் நுகர்வோருக்கு விற்பனை செய்ய பயிர்களை தொடர்ந்து கொண்டு வருவார்கள்,'' என்றார்.

முன்னதாக இர் இஷாம் இங்குள்ள விஸ்மா கோப்ராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாட்டில் (கோஹிஜ்ரா) கோத்தா ராஜா சமூக விவசாயத் திருவிழாவை நடத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.