NATIONAL

காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது 65 வயது முதியவர் ஆறு நாட்கள் தடுப்பு காவல்

1 மார்ச் 2024, 9:38 AM
காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது 65 வயது முதியவர் ஆறு நாட்கள் தடுப்பு காவல்

சுங்கை பட்டாணி மார்ச் 1: சிக் அருகே உலு மூடா வனப்பகுதியில் நேற்று காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக 65 வயது முதியவர் ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இன்று சுங்கை பட்டாணி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நூர் ஃபஸ்லினா மூசா இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று, கெடா காவல் படைத் தலைமையகத்தின் (ஐபிகே) சிறப்புப் பிரிவின் ஜூனியர் காவல்துறை அதிகாரி ஒருவர், வனக் காப்பகத்தில் உள்ள 124 பகுதியில் அத்துமீறல் மற்றும் வேட்டையாடுதல் நடவடிக்கைகள் பற்றி விசாரிக்கும் போது சுடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சிக் மாவட்ட காவல்துறை தலைமையக குழு, கெடா IPK சிறப்புப் பிரிவின் உறுப்பினர்கள், மத்திய கெடா மாவட்ட வன அலுவலக குழு மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் பாதிக்கப்பட்டவர், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் 12 மணியளவில் உளூ மூடா வனப் பகுதிக்குள் நுழைந்ததாக சிக் மாவட்ட காவல் துறைத் தலைவர் டிஎஸ்பி அப்துல் ரசாக் ஒஸ்மான் தெரிவித்ததாகக் கூறப்பட்டது..

பாதிக்கப்பட்டவர் மற்றும் பொதுமக்களில் இருவர் கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் 124ஆம் பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

"இருண்ட வானிலை காரணமாக அவர்கள் தொலைந்து போனதாக நம்பப்படுகிறது, நேற்று அதிகாலை 2 மணியளவில் வெடி சத்தம் கேட்டது. பாதிக்கப்பட்டவர் வெற்றிகரமாக அதிகாலை 5 மணிக்கு வெளியேக் கொண்டு வரப்பட்டார். பின்னர், அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது" என்று ஒஸ்மான் கூறினார்.

பாதிக்கப்பட்டவருக்கு மரணம் விளைவித்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணத்தை கண்டறிய குற்றவியல் சட்டப்பிரிவு 304 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.