NATIONAL

2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் கொண்டு வரும் தேசிய விளையாட்டு வீரருக்கு கார் பரிசு

1 மார்ச் 2024, 9:33 AM
2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் கொண்டு வரும் தேசிய விளையாட்டு வீரருக்கு கார் பரிசு

கோலாலம்பூர், மார்ச் 1: பாரிஸில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ள 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் கொண்டு வரும் தேசிய விளையாட்டு வீரருக்கு வெளிநாட்டு கார் பரிசாக வழங்கப்படும்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வில் வெற்றியடையும் நாட்டின் முதல் விளையாட்டு வீரர்களுக்கு வெகுமதி அளிக்க ஆர்வமாக உள்ள கார் நிறுவனத்திடம் இருந்து ரோட் டு கோல்ட் (RTG) குழு ஒரு சன்மானத்திகான உறுதியை பெற்றுள்ளது  என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

இருப்பினும், பாரிஸ் 2024 இல் நாட்டைப் பெருமைப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்க  நிறுவனங்கள் (ஜிஎல்சி) உள்பட உள்ளூர் நிறுவனங்கள் வெகுமதி அளிக்க முன் வரும் என்றும் ஹன்னா நம்புகிறார்.

"ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு வெகுமதி வழங்க நாங்கள் உள்ளூர் நிறுவனங்களுக்கு  வாய்ப்புகள் அளிக்க விரும்புகிறோம்,

"எனவே எந்த ஒரு உள்ளூர் நிறுவனமும் விளையாட்டாளர்களுக்கு சன்மானம் வழங்க தயாராக இருந்தால், ஆர்டிஜி ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஸ்டூவர்ட் ராமலிங்கத்தை தொடர்பு கொள்ளலாம்" என்று இன்று ஆர்டிஜி குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்லும் விளையாட்டு வீரர்கள், வென்ற பதக்கத்தின் நிறத்திற்கு ஏற்ப வெற்றி பரிசுத் திட்டத்தை (ஷாகம்) பெற தகுதியுடையவர்கள்.

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர்கள் RM1 மில்லியனைப் பெறுவார்கள், அதே சமயம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் RM300,000 மற்றும் RM100,000 முறையே பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.