NATIONAL

வெ.19,700 கோடி இலக்கைக் காட்டிலும் அதிக வரியை வருமான வரி வாரியம் வசூலிக்க வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

1 மார்ச் 2024, 8:36 AM
வெ.19,700 கோடி இலக்கைக் காட்டிலும் அதிக வரியை வருமான வரி வாரியம் வசூலிக்க வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

புத்ராஜெயா, மார்ச் 1- உள்நாட்டு வருமான வரி  வாரியம்  இவ்வாண்டிற்கு நிர்ணயித்த 19,700 கோடி  வெள்ளி வரியை விட அதிகத் தொகையை வசூலிக்க முடியும்  பிரதமர்  என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 18,334  கோடி வெள்ளி வரியை வசூலித்து உள்நாட்டு வருமான வரி வாரியம் சாதனைப் படைத்ததாக நிதியமைச்சருமான அவர் சொன்னார்.

கடந்த 2022ஆம் ஆண்டின் மொத்த வசூலைக் காட்டிலும் இது  780 கோடி வெள்ளி அல்லது  4.49 சதவீதம் அதிகமாகும் என அவர்  தெரிவித்தார்.

இருப்பினும், இதர அண்டை நாடுகளான சிங்கப்பூர் (12.6 சதவீதம்) மற்றும் தாய்லாந்து (16.4 சதவீதம்) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது   மலேசியா இன்னும் குறைந்த வரி அடிப்படையை அதாவது  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 11.2 விழுக்காட்டை மட்டுமே கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் , நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில்  வரியைச் செலுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில் உள்ள  பதிவுசெய்யப்பட்ட 15  லட்சம் நிறுவனங்களுடன்  ஒப்பிடுகையில் வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாக அதாவது சுமார் 435,000ஆக   மட்டுமே உள்ளது என்றார் அவர்.

பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 29 சதவீதத்திற்கும் குறைவானவவை மட்டுமே வரி செலுத்துகின்றன என்பது இதன் பொருளாகும் என்று  இன்று அனுசரிக்கப்பட்ட 28வது வருவாய் தின விழா விழாவில் அவர் கூறினார்.

கடத்தாண்டு டிசம்பர் 31 வரை  வரி செலுத்துப் தனிநபர்களின் எண்ணிக்கை 57 லட்சம் பேராகவும் அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டத் தொகை   4,096 கோடி வெள்ளியாகவும் இருந்ததாகக் கூறிய அவர்,  அதேசமயம் 539,113 நிறுவனங்களிடமிருந்து   9,877  கோடி வெள்ளி வரியாக வசூலிக்கப்பட்டது என்றார்.

உள்நாட்டு வருமான வரி வாரியம்  எடுத்த நடவடிக்கைகள் நாட்டின் வருவாயை அதிகரிப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை என்றும் அன்வார் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.