NATIONAL

பெட்ரோல் நிலையத்தில் புகைப்பிடிக்கும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை

1 மார்ச் 2024, 4:44 AM
பெட்ரோல் நிலையத்தில் புகைப்பிடிக்கும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை

ஈப்போ, மார்ச் 1: பெஹ்ராங்கின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருளை நிரப்பும் போது புகை பிடிக்கும் சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர் ஒருவரின் செயலை காவல்துறையினர் தீவிரமாகக் கருதுகின்றனர். இந்த செயல் வீடியோ மூலம் நேற்று வைரலானது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாகத் தனது தரப்பு கண்டறிந்துள்ளதாக முஹல்லிம் மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் கூறினார்.

"எரிவாயு நிலையத்தின் உரிமையாளர், பயனரின் செயல்களில் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்புள்ள உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்திடம் புகார் செய்தார். " என்று அவர் நேற்று இரவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

புகையிலை வருவாய்க் கட்டுப்பாடு விதிமுறைகள் 2004 கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது RM10,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.

எனவே, தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடிக்க வேண்டாம் என்றும், குறிப்பாக பேரழிவுகள் மற்றும் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எரிபொருள் நிலையங்களில் புகைபிடிக்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.