NATIONAL

தொலைபேசி மோசடியில் சிக்கிய மூதாட்டி 173,000 வெள்ளியை இழந்தார்

1 மார்ச் 2024, 3:34 AM
தொலைபேசி மோசடியில் சிக்கிய மூதாட்டி 173,000 வெள்ளியை இழந்தார்

சிரம்பான், மார்ச் 1- தொலைபேசி மோசடிக் கும்பலின் வலையில் சிக்கிய 66 வயது மூதாட்டி நேற்று 173,000 வெள்ளியை இழந்தார்.

அந்த மூதாட்டியை தொலைபேசி வழி தொடர்பு கொண்ட அனாமதேய நபர் ஒருவர் சந்தேகத்திற்குரிய பொட்டலம் ஒன்று தங்கள் வசம் உள்ளது எனக் கூறியதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஹாத்தா சின் டின் கூறினார்.

பின்னர் அந்த அந்த அழைப்பு ‘போலீஸ்காரர்‘ ஒருவருக்கு மாற்றி விடப்பட்டது. அந்த போலீஸ்காரர் கூறிய சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் கைது ஆணை போன்ற வார்த்தைகளால் பெரும் அச்சத்திற்குள்ளான அந்த மூதாட்டி தன்னிடம் வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு 173,000 வெள்ளியை மாற்றியுள்ளார் என அவர் சொன்னார்.

பணப் பரிவர்த்தனை செய்யப் பட்டப் பின்னர் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முடியாத வகையில் தொலைபேசி இணைப்பு கட்டுப் படுத்தப் பட்டதை தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை அந்த மூதாட்டி உணர்ந்துள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இத்தகைய பாணியிலான மோசடி சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு பொதுக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.