NATIONAL

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த RM212 மில்லியன் ஒதுக்கீடு

1 மார்ச் 2024, 3:29 AM
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த RM212 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 1: உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும், கிள்ளான் நகரை அழகுபடுத்தவும் கிள்ளான் மாநகராட்சி மொத்தம் RM212 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

இந்த செலவில் சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் பொது சுகாதாரத்திற்கு RM91.914 மில்லியன் மற்றும் வடிகால் பராமரிப்பிற்கு RM24.957 மில்லியன் ஆகியவை அடங்கும் என்று மேயர் டத்தின் படுகா நோராயினி ரோஸ்லான் தெரிவித்தார்.

"மேலும், சாலை பராமரிப்பிற்கு RM 67.250 மில்லியன், பூங்காக்கள், நிலப்பரப்பு அழகுபடுத்துதல் மற்றும் பராமரிப்பிற்கு RM28.056 மில்லியன் ஒதுக்கப் பட்டது," என்று அவர் எம்பிடிகேயின் முழு கூட்டத்தில் கூறினார்.

கிள்ளானை அரச பாரம்பரிய நகரமாகவும், உலகளவில் போட்டித் துறைமுகமாகவும் மேம்படுத்தும் நோக்கில் எம்பிடிகே முழுமையான மற்றும் நிலையான வளர்ச்சியை வலியுறுத்தும் என்று நோராயினி கூறினார்.

மேலும், பிப்ரவரி 7 அன்று நடந்த 2023 குறைந்த கார்பன் நகரம் விருது வழங்கும் விழாவில் பார்ட்னர் பிரிவில் டைமண்ட் அங்கீகார விருதை வென்ற எம்பிடிகே அவர் வாழ்த்தினார்.

இந்த டைமண்ட் அங்கீகார விருது பெற்ற 16 தரப்பினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.