NATIONAL

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் மரணம்- லோரி ஓட்டுநர் கைது

29 பிப்ரவரி 2024, 6:52 AM
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் மரணம்- லோரி ஓட்டுநர் கைது

ஷா ஆலம், பிப் 29 - செத்தியா ஆலமில் தாய்லாந்து பெண் ஒருவர்  மரணமடைந்தது தொடர்பாக லோரி ஓட்டுனர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண்ணை அவரது காதலர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 23வது மாடியில் இருந்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் நேற்றிரவு 10.10 மணியளவில் சந்தேகப் பேர்வழியைச் சம்பவ இடத்தில் கைது செய்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 10.02 மணிக்குப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உள்நாட்டவரான 37 வயது சந்தேகப்பேர்வழிக்கும் 32 வயதுடைய பெண்ணுக்கும் இடையே சண்டை எற்பட்டதாகச் சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றன என்று அவர் சொன்னார்.

லோரி ஓட்டுநராக வேலை செய்யும் சந்தேகப் பேர்வழிக்குப் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் ஏழு குற்றப் பதிவுகளும் போதைப் பொருள் தொடர்பில் ஒரு குற்றப் பதிவும் உள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அவ்வாடவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் கஞ்சா போதைப் பொருளைப் பயன்படுத்தியருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.