கோலாலம்பூர், பிப் 29: 2024/2025 கல்வி அமர்வுக்காக மாணவர்கள் ஆரம்பநிலைக் கல்வி, சான்றிதழ், டிப்ளோமா மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான முதல் கட்டமாக ``UPUOnline`` மூலம் இன்று முதல் மார்ச் 29 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், ஏப்ரல் 29 முதல் ஜூன் 9 வரை இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பம் திறந்திருக்கும்.
இருபது பொதுப் பல்கலைக்கழகங்கள் (யுஏ), 36 பாலிடெக்னிக்குகள், 105 சமுக கல்லூரிகள் மற்றும் 4 பொது உயர் திறன் பெற்ற நிறுவனங்களில் (ILKA) மாணவர்கள் பதிவுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகம் (KPT) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசிய கல்விச் சான்றிதழ் (SPM) மற்றும் மலேசிய மேல்நிலைப் பள்ளிச் சான்றிதழ் (STPM) உடைய மாணவர்களுக்கு முதல் கட்ட விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது மற்றும் நேர்முகத்தேர்வு அல்லது சோதனை கொண்டுள்ள கல்விக்கு இரண்டாம் கட்டம் திறந்திருக்கும்.
"அனைத்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களும் உயர்கல்வி அளவில் தங்கள் கல்வியைத் தொடர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் எஸ்பிஎம் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மொத்தம் 503 கல்வி திட்டங்கள் மற்றும் எஸ்பிஎம் அல்லது அதற்கு நிகரான கல்வி, பாலிடெக்னிக், சமூக கல்லூரி மற்றும் பொது உயர் திறன் பெற்ற நிறுவனங்களில் பயின்றவர்களுக்கு 1,111 கல்வி திட்டங்கள் வழங்கப்படுகின்றன," என்று தெரிவிக்கப்பட்டது.
``UPUOnline`` பின் எண்களை 350 பிஎஸ்என் வங்கி கிளையின் கவுண்டர்கள், 700 பிஎஸ்என் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள் (ATM) மற்றும் ``myBSN`` இணையப் பேங்கிங் மூலம் வாங்கலாம் என்று உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"பிஎஸ்என், பணம் செலுத்திய ரசீது நகலுடன் பின் எண்ணை வழங்கும். விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான சீட்டை சரியான ஆதாரமாக வைத்திருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,".
– பெர்னாமா




