NATIONAL

போக்குவரத்து குற்றங்களுக்காக இம்மாதம் 17,762 அந்நிய நாட்டினருக்கு குற்றப்பதிவுகள்- ஜே.பி.ஜே. வெளியிட்டது

29 பிப்ரவரி 2024, 5:07 AM
போக்குவரத்து குற்றங்களுக்காக இம்மாதம் 17,762 அந்நிய நாட்டினருக்கு குற்றப்பதிவுகள்- ஜே.பி.ஜே. வெளியிட்டது

ஜோகூர்பாரு, பிப் 29 - சீனப்புத்தாண்டை முன்னிட்டு இம்மாதம் முழுவதும்

மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு

போக்குவரத்து குற்றங்களுக்காக 17,762 அந்நிய நாட்டினருக்குக்

குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த சோதனைகளின் போது மலேசிய வாகனமோட்டும் லைசென்ஸ்

இல்லாததற்காக 6,380 குற்றப்பதிவுகளும் சாலை வரி இல்லாத

குற்றத்திற்காக 2,120 குற்றப்பதிவுகளும் வாகனக் காப்புறுதி இல்லாததற்காக

1,843 குற்றப்பதிவுகளும் இதரக் குற்றங்களுக்காக 7,419 குற்றப்பதிவுகளும்

வெளியிடப்பட்டதாகச் சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜே.பி.ஜே.) சட்ட

அமலாக்கப் பிரிவு முதன்மை இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமஹான்

கூறினார்.

பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட

ஒருங்கிணைந்த சாலை சோதனை நடவடிக்கைகளின் போது

வெளியிடப்பட்ட 165,553 குற்றப்பதிவுகளில் வெளிநாட்டினருக்கு

வழங்கப்பட்ட குற்றப்பதிவுகளும் அடங்கும் என்று அவர் சொன்னார்.

நேற்றிரவு ஸ்டாய் டோல் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த

சோதனை நடவடிக்கைக்கு தலைமை தாங்கியப் பின்னர்

செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், இந்த சோதனை நடவடிக்கைகளின் போது போதைப் பொருளைப்

பயன்படுத்தியக் குற்றத்திற்காகப் பொது போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள்

உள்பட 33 வானமோட்டிகளை ஜே.பி.ஜே. கைது செய்தது என்று அவர்

தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு மரணங்களை

உட்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக

லோக்மான் சொன்னார். கடந்த 2022ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 6,080 பேர் உயிரிழந்த நிலையில் கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 6,344 பேராக உயர்வு கண்டது என்றார்.

மரண விபத்துகளின் எண்ணிக்கை எட்டு விழுக்காடு அதிகரித்துள்தை இந்த

எண்ணிக்கை காட்டுகிறது. சாலை விபத்துகளில் பலியானோரில் 4,000 பேர்

மோட்டார் சைக்கிளோட்டிகளாவர், அதாவது இந்த மாதம் மட்டும்

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு மரண விபத்து நிகழ்வதை

இது காட்டுகிறது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.