NATIONAL

 ‘பள்ளிக்குத் திரும்பும்’ உதவித் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து  ஊக்குவிக்கும்- பிரதமர்

29 பிப்ரவரி 2024, 5:01 AM
 ‘பள்ளிக்குத் திரும்பும்’ உதவித் திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து  ஊக்குவிக்கும்- பிரதமர்

கோலாலம்பூர், பிப். 29- ‘பள்ளிக்குத் திரும்பும்’ உதவித் திட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடரும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அண்மையில் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘பள்ளிக்குத் திரும்பும்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“எனது அரசியல் செயலாளர் சகோதரர் கமில் முனிம் என் சார்பாகத் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதிக்கான ‘பள்ளிக்குத் திரும்பும்’’ உதவியை வழங்கினார்.

“இந்த திட்டத்தில் 1,500 பெறுநர்கள் பயனடைந்துள்ளனர். இந்த உதவி புதிய பள்ளி அமர்வு விரைவில் நெருங்கி வருவதால் பள்ளி பொருட்களை வாங்குவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று நம்பப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இதுபோன்ற உதவிகளைச் செயல்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்,” என்று பிரதமர் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.