NATIONAL

ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் அலவன்ஸ் தொகையை அதிகரிக்க மாநில அரசு திட்டம்

29 பிப்ரவரி 2024, 4:38 AM
ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் அலவன்ஸ் தொகையை அதிகரிக்க மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், பிப் 29 - சிலாங்கூரிலுள்ள ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர அலவன்ஸ் தொகையை அதிகரிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

பணிகளை ஆற்றும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.

ஆகக் கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் அலவன்ஸ் தொகை அதிகரிக்கப் பட்டதாக கூறிய அவர், தற்போது மாநகர் மன்ற மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு மாதம் 2,500 வெள்ளியும் மாவட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மாதம் 2,000 வெள்ளியும் அலவன்சாக வழங்கப்படுகிறது என்றார்.

அலவன்ஸ் தொகையை மறுஆய்வு செய்யும் விவகாரத்தில் மக்களுக்கு சேவையாற்றுவதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் சுமைகள் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக கவுன்சிலர்கள்  ஆற்றும் பணி மற்றும் எந்நேரமும் களத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஆகியவை அவர்கள் எதிர்நோக்கும் சவால்களாகும் என்றார் அவர்.

இது தவிர, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினப் பிரச்சனையையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். அவலன்ஸ் அதிகரிப்பின் வாயிலாக இது போன்ற சுமைகளை அவர்கள் குறைக்க இயலும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேற்குறிப்பிடப்பட்ட சவால்களைக் கருத்தில் கொண்டு பினாங்கு அரசாங்கம் அம்மாநிலத்திலுள்ள கவுன்சிலர்களுக்கான அலவன்ஸ் தொகையை கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி 2,500 வெள்ளியிலிருந்து 4,000 வெள்ளியாக உயர்த்தியுள்ளதையும் இங் சுட்டிக்காட்டினார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று சிலாங்கூரிலுள்ள ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் அலவன்ஸ் தொகையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் உதவிகள் குறித்து சுபாங் ஜெயா உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.