NATIONAL

பொலிவிழந்த அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைக்க 7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

28 பிப்ரவரி 2024, 9:27 AM
பொலிவிழந்த அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைக்க 7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

ஷா ஆலம், பிப் 28: பழுதடைந்து பொலிவிழந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்குப் பொலிவூட்டும் திட்டம் (செரியா) மூலம் மறுசீரமைக்க சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டு மொத்தம் 7 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் வாரியத்தின் (LPHS) மேற்பார்வையின் கீழ் உள்ள திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று வீட்டு வசதி ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா கூறினார்.

குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காகப் பாழடைந்த வீடுகளை மறுசீரமைக்க பல்வேறு சமூக அடிப்படையிலான திட்டங்களையும் சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் வாரியம் வழங்குகிறது என்று அவர் விளக்கினார்.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில், இத்திட்டம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் (ஏடிஎன்) ஶ்ரீ செர்டாங் அப்பாஸ் அஸ்மியின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னதாக, பண்டான் இண்டாவைச் சுற்றியுள்ள குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் எட்டுத் தொகுதிகளை மறுசீரமைக்க RM1 மில்லியன் நிதியை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தையும் அதிகரிப்பதுடன், வசதியான அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கும் குறிக்கோளுடன் இத்திட்டம் அமைந்துள்ளது என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.