NATIONAL

சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் சேவையை 67 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்

28 பிப்ரவரி 2024, 8:19 AM
சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் சேவையை 67 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்

ஷா ஆலம், பிப் 28: சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் சேவையை 2015 முதல் 67 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்திட்டத்தின் இலக்கை எட்டியுள்ளதாக வீட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவை லாபம் ஈட்டுவதற்காக அல்ல, மாறாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் பிரிவினரின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காகவே செயல்படுத்தப்பட்டது என்று போர்ஹான் அமன் ஷா விளக்கினார்.

"உள்ளூர் அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட நிறுவனங்களின் பராமரிப்பு உட்பட ஒட்டுமொத்த செயல்பாட்டுச் செலவுக்காக மாநில அரசு கடந்த ஆண்டில் RM15.03 மில்லியனைச் செலவிட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இன்று சிலாங்கூர் மாநில மக்களைவை அமர்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி குணராஜ் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ்ஸின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், தேவைக்கேற்ப போக்குவரத்து சேவை (டிஆர்டி) மூலம் வேன்கள் மற்றும் மினிபஸ்களைக் கூடுதலாக வழங்குவதற்கும் சிலாங்கூர் இந்த ஆண்டு RM5 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.