NATIONAL

ஆட்டிஸம் சிறுவன் நீர்ப்பிடிப்பு பகுதியில் மூழ்கி மரணம்

28 பிப்ரவரி 2024, 4:16 AM
ஆட்டிஸம் சிறுவன் நீர்ப்பிடிப்பு பகுதியில் மூழ்கி மரணம்

கோலாலம்பூர், பிப் 28 - பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வெள்ள நீர் சேகரிப்பு குளத்தில் நேற்று சிறுவன் ஒருவன் மூழ்கி உயிரிழந்தான்.

அந்த குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  பொதுமக்கள் நேற்றிரவு 7.00 அச்சிறுவனின் சடலத்தைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்ததாக  பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷாருல் நிஜாம் ஜாஃபர்@இஸ்மாயில் கூறினார்.

அச்சிறுவனின் உடலை வெள்ளப் பிடிப்புக் குளத்தின் நடுவில் மீன்  பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கண்டனர். அவரது உடல் மலாயா மருத்துவ மையத்தின் தடயவியல் துறைக்கு பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று மாலை 4.00  மணியளவில் காணாமல் போனதாக நம்பப்படும் தனது மகனைக் கண்டுபிடிக்க உதவும்படி  நூர் ஹிதாயாதி என்ற பெண் ஒருவர் தனது முகநூல் பதிவின் வழி பொதுமக்களின் உதவியைக் கேட்டிருந்தார்.

பெட்டாலிங் ஜெயா,  தாமான் அமானில் 4 .00 மணியளவில் எனது 6 வயது மகன் காணாமல் போனான். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாராவது அவரைக் கண்டால்  013-405 9569 என்ற எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளவும். ஏனெனில் எனது மகனுக்கு மதி இறுக்க (ஆட்டிஸம்) குறைபாடு உள்ளது என்று அவர் அப்பதிவில் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.