பாங்கி, பிப் 27 - கடந்த வாரம் தாமான் பெலாங்கி செமினி 2இல், ஒரு வாகன ஓட்டியைக்
கொலை செய்ததாக உணவு விநியோக செய்யும் ஐந்து நபர்கள் மீது பண்டார் பாரு பாங்கி
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
முகமட் யூரி ரனோஃப் முகமட் பச்சூரி (41), அசாருல் அசுவான் முகமட் அசான் (34),
தெங்கு இஷாம் தெங்கு ஹமிட் (22), மஹாசிர் நோர்டின் (43) மற்றும் சியாம்சுல் கமார்
அயோப் (40), ஆகியோர் மஸ்திரேட் நோர்டியானா முகமட் நவாவி முன் வாசிக்கப்பட்ட
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.
எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை. தடயவியல், ரசாயனம் மற்றும் பிரேதப்
பரிசோதனை அறிக்கைகளை ஏப்ரல் 25-ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்ரவரி 20 அன்று இரவு 9.54 மணிக்குப் பெரானாங்கில் உள்ள ஜாலான் டிபிஎஸ் 2/3,
தாமான் பெலாங்கி செமினி 2 இல் ஷாரில் சமட் (41) என்பவரை கொலை செய்ததாக
ஐந்து பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டப்பிரிவு 302 இன் கீழ் கட்டமைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டு, அதே பிரிவு
34 உடன் சேர்த்து வாசிக்கப்பட்டது. மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக்
குறையாத ஆனால், 40 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை தண்டனை விதிக்கப்படும்.
மேலும், மரண தண்டனை விதிக்க படாவிட்டால், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும்
விதிக்கப்படலாம்.
துணை அரசு வழக்கறிஞர் சித்தி நோர் லியானா முகமட் சுலைமான் வழக்கு தொடர்ந்தார்,
மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரின் சார்பாக வழக்கறிஞர் முகமட் ஹபீஸ்
ஆஜரானார்.
பிப்ரவரி 21 அன்று, பாதிக்கப்பட்டவர் புரோட்டான் சாகா காரை ஓட்டிச் சென்றபோது,
அது சறுக்கி, குடியிருப்புப் பகுதியின் வேலியில் மோதியதாகப் பெர்னாமா தெரிவித்தது.
பின்னர் பாதிக்கப்பட்ட நபரை அவரது காரிலிருந்து இழுத்து சென்று, கட்டி வைத்து, ஒரு
கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.
- பெர்னாமா




