புத்ராஜெயா, பிப் 27 - பிப்ரவரி 11 முதல் 17 வரையிலான 7வது தொற்றுநோயியல்
வாரத்தில் (ME07) டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 3,483 ஆகக்
குறைந்துள்ளது. இந்நிலையில் முந்தைய வாரத்தில் 3,631 சம்பவங்கள் பதிவாகியிருந்தது
குறிப்பிடத்தக்கது. மேலும், நான்கு இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
“டிங்கி காய்ச்சலால் 14 இறப்புகள் பதிவாகியுள்ளன” என்று சுகாதார இயக்குநர் ஜெனரல்,
டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி அபு ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
முந்தைய வாரத்தில் 199ஆக இருந்த ஹாட்ஸ்பாட் இடங்களின் எண்ணிக்கை 185ஆகக்
குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.
அதாவது, சிலாங்கூரில் 144, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 17, பேராக்கில் 9,
நெகிரி செம்பிலானில் 6, பினாங்கில் 4, கெடா மற்றும் சபாவில் தலா இரண்டு மற்றும்
பகாங்கில் ஒன்று ஆகும்.
- பெர்னாமா




