NATIONAL

நாட்டில் கிட்டத்தட்ட RM170 மில்லியன் பந்துவான் வாங் இஹ்சான் விநியோகிக்கப்பட்டுள்ளது

27 பிப்ரவரி 2024, 8:11 AM
நாட்டில் கிட்டத்தட்ட RM170 மில்லியன் பந்துவான் வாங் இஹ்சான் விநியோகிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், பிப் 27: நாட்டில் 2022/2023 வடகிழக்கு பருவமழை (MTL) காலம் முழுவதும் 168,959 குடும்பத் தலைவர் களுக்கு (KIR) கிட்டத்தட்ட RM170 மில்லியன் பந்துவான் வாங் இஹ்சான் (BWI) விநியோகிக்கப் பட்டுள்ளது என்று டேவான் ரக்யாட் இன்று தெரிவித்துள்ளது.

மேலும், RM560,000 பந்துவான் வாங் இஹ்சான் மரணம் அடைந்தவர்களின் 56 வாரிசுகளுக்கு விநியோகிக்கப்பட்டது என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் பேரிடர் உதவிக்காக RM232 மில்லியனை ஆரம்ப ஒதுக்கீடு விநியோகம் செய்யப்பட்டது என்றார்.

"பந்துவான் வாங் இஹ்சான் என்பது பேரழிவால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு அல்ல, மாறாக அவர்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசின் அக்கறையின் அடையாளம்" என்று அவர் கூறினார்.

இன்று டேவான் ராக்யாட்டில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிக் கொள்கை மற்றும் நிதி உதவி உள்ளிட்ட இழப்பீட்டுத் தொகை குறித்து டத்தோ சித்தி சைலா முகமட் யூசோவ் (ரந்தாவ் பஞ்சாங்) கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.