NATIONAL

நீரில் மூழ்கிய 10 வயது சிறுவன்  தனது தாத்தாவால் காப்பாற்றப்பட்டான்

27 பிப்ரவரி 2024, 3:53 AM
நீரில் மூழ்கிய 10 வயது சிறுவன்  தனது தாத்தாவால்  காப்பாற்றப்பட்டான்

கோத்தா கினபாலு, பிப் 27: நேற்று மதியம் கம்போங் பெனெகாதான் அருகில் இருக்கும் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய 10 வயது சிறுவனை அவரது தாத்தா காப்பாற்றினார். ஆனால், மற்றொரு சிறுவன் நீரில் மூழ்கி இறந்தார்.

இச்சம்பவத்தில் சைனிஸ் கபாகா (74), தனது பேரனான ஜாக்சன் மார்க்கைக் காப்பாற்ற முடிந்தது. அதே நேரத்தில் அலோசியஸ் ஆல்பிரட் (13) எனும் சிறுவன் ஆற்றின் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மாலை 5.50 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் உடனே கெனிங்காவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

"வலுவான நீரோட்டத்தின் காரணமாக குறிப்பிட்ட சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அச்சிறுவனை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேல் தகவல்களைப் பெற தீயணைப்புக் குழு இன்னும் சம்பவ இடத்தில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை தீயணைப்பு துறையினர் அவ்வப்போது தெரிவித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.