NATIONAL

 1,134 ரம்ஜான் பஜார் அனுமதிகளை ஷா ஆலம் மாநகராட்சி வழங்கியது

27 பிப்ரவரி 2024, 3:33 AM
 1,134 ரம்ஜான் பஜார் அனுமதிகளை ஷா ஆலம் மாநகராட்சி வழங்கியது

ஷா ஆலம், பிப் 27: இந்த ஆண்டு 1,134 ரம்ஜான் பஜார் அனுமதிகளை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) வியாபாரிகளுக்கு வழங்கியது.

செக்‌ஷன் 6, 7, 8, 9, 13, 16, 17, 18, 19, 20, 24, 25, 27, 28, 35, U2, U3 U5, U8, U13 மற்றும் U20 ஆகிய 27 இடங்களில் ரம்ஜான் பஜார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் கூறினார்.

தனியார் தரப்பு, சங்கங்கள் அல்லது கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (MPKK) கீழ் 936 ரம்ஜான் பஜார் அனுமதிகளை வழங்குவதையும் எம்பிஎஸ்ஏ ஒருங்கிணைக்கிறது.

"மேலும், ஷா ஆலம் செக்‌ஷன் 13 விளையாட்டு அரங்கம், பிகேஎன்எஸ் கொம்ப்ளக்ஸ் செக்‌ஷன் 14, செக்‌ஷன் 20, செக்‌ஷன் U10, செக்‌ஷன் U20 உட்பட 12 அங்கீகரிக்கப்பட்ட பசார் ரம்ஜான் மையங்களும் உள்ளன" என்று முகமட் அசார் முகமட் ஷெரீப் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இணைய சோதனை முறையை அறிமுகப்படுத்தி இந்த ஆண்டு பஜார் அனுமதி விண்ணப்பங்களுக்கான மாற்றத்தை எம்பிஎஸ்ஏ செயல் படுத்தியதாக அவர் கூறினார்.

"இந்த முறையின் மூலம், இணையத்தில் வழங்கப் படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன் வணிகர்கள் எம்பிஎஸ்ஏ உரிமத் தேவைகள், உணவு கையாளுதல் மற்றும் கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்த வீடியோவைப் பார்க்க வேண்டும்.

"வர்த்தகர்களிடம் எம்பிஎஸ்ஏ நிர்ணயித்த அளவுகோல்களை பற்றிய புரிதலை அதிகரிப்பதற்கும், உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பில் கையாளுதல் மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதற்கும் இந்த சோதனை முறையை எம்பிஎஸ்ஏ செயல்படுத்தியுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.