NATIONAL

சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கி வைக்க சுல்தான் வருகை

27 பிப்ரவரி 2024, 3:22 AM
சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கி வைக்க சுல்தான் வருகை

ஷா ஆலம், பிப் 27 -  இங்குள்ள அனெக்ஸ் கட்டிடத்தில் இன்று தொடங்கும்  15வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரைத் தொடக்கி வைக்க மேன்மை தங்கிய   சிலாங்கூர் சுல்தான் வருகை புரிந்தார்.

சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில சட்டமன்ற  சபாநாயகர் லாவ் வெங் சான் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும், மேலும் மேன்மை தங்கிய தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் மற்றும் மதிப்புமிகு  சிலாங்கூர்  ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாநில அரசு தலைமைச் செயலகத்திற்கு சுல்தான் வந்தடைந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் அரச மலேசிய கடற்படையின் மரியாதை அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.

சிலாங்கூர்   மாநில சட்டமன்றத்தின் பதினைந்தாவது  கூட்டத் தொடர்  இன்று தொடங்கி  மார்ச் 11ஆம் தேதி வரை  பத்து நாட்களுக்கு இங்குள்ள நடைபெறும்.

அவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை  https://selangortv.my/  மற்றும்  Facebook MediaSelangor மூலம் பொதுமக்கள் காணலாம்.

சட்டமன்ற  உறுப்பினர்களின்  விவாதங்கள் மற்றும் உரைகளை  தினசரி  selangorkini.my  என்ற அகப்பக்கம்  மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்  .

இது தவிர, சிலாங்கூகினி செய்தித்தாள் மற்றும் அகப்பக்கம் வாயிலாகவும் சட்டமன்றச் செய்திகளை அறிந்து கொள்ள இயலும். மேலும், மாண்டரின், தமிழ்  மற்றும்  ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று பதிப்புகளிலும் கூட்டத் தொடர் தொடர்பான விவாதங்கள் வெளியிடப்படும்

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.