ECONOMY

11 யூனிட் மடிக்கணினிகளை எம்பிஐ நன்கொடையாக வழங்கியது

27 பிப்ரவரி 2024, 2:46 AM
11 யூனிட் மடிக்கணினிகளை எம்பிஐ நன்கொடையாக வழங்கியது

ஷா ஆலம், பிப் 27: நேற்று கோத்தா அங்கெரிக் தொகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு (B40) 11 யூனிட் மடிக்கணினிகளை எம்பிஐ நன்கொடையாக வழங்கியது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்காக 11 யூனிட் ஹெச்பி மாடல் மடிக்கணினிகளை வாங்குவதற்கு RM27,500 செலவிட்டதாக அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் தலைவர் கூறினார்.

"ஒவ்வொரு மடிக்கணினியின் விலை RM2,500 ஆகும். நாங்கள் அத்தொகுதியின் சேவை மையத்திலிருந்து விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு 11 மடிக்கணினிகளை வழங்கினோம்.

"மேலும், எம்பிஐ பிற தொகுதிகளிலும் மடிக்கணினியை வழங்குவார்கள்" என்று அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், ஒவ்வொரு ஆண்டும் தகுதித் தேவைகளுக்கு ஏற்ப மடிக்கணினி உதவி தேவைப்படுபவர்களுக்கு எம்பிஐ அதனை வழங்குகிறது என்று அஹ்மட் அஸ்ரி தெரிவித்தார்.

"விண்ணப்பத் தேவைகளில் ஒன்று RM5,000க்கும் குறைவான குடும்ப வருமானம் மற்றும் பொது அல்லது தனியார் பல்கலைகழகங்களில் பயில்பவராக இருக்க வேண்டும். 

"எம்பிஐக்கு ஆதரவு கடிதத்தை வழங்கும் அந்தந்த தொகுதி சேவை மையம் மூலம் விண்ணப்பங்களைச் செய்யலாம்" என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.