NATIONAL

கோத்தா கெமுனிங் தொகுதியில் சுகாதார கர்னிவல் ஏற்பாடு

26 பிப்ரவரி 2024, 8:45 AM
கோத்தா கெமுனிங் தொகுதியில் சுகாதார கர்னிவல் ஏற்பாடு

ஷா ஆலம், பிப் 26: மார்ச் மாதம் முழுவதும் கோத்தா கெமுனிங் தொகுதியில் உள்ள பல பகுதிகளில் சுகாதார கர்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்றம் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கண், உடல் எடை, இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவை இலவசமாகப் பரிசோதனை செய்யப்படும்.

மேலும், மூக்கு கண்ணாடிகளுக்குத் தள்ளுபடி, இலவச மேமோகிராம் கூப்பன்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறும்.

தகுதியான குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு (B40) ``Saringan Peka B 40`` திட்டத்தின் கீழ் சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்படும் மற்றும் தகுதியான குடியுருப்பாளர்களுக்குப் பெர்கேசோவால் ``HSP`` பரிசோதனையும் நடத்தப்படும்.

இடங்கள் மற்றும் நாட்கள் பின்வருபவை:

  1. மண்டலம் - 10 எம்பிஎஸ்ஏ

  1. மண்டலம் – 7 எம்பிஎஸ்ஜே

  • மார்ச் 16

  • மண்டலம் 7 சமூக அலுவலகம், புத்ரா ஹைட்ஸ்

  • https://g.co/kgs/pRJLjLg

  1.  மண்டலம் – 12 எம்பிஎஸ்ஏ

  • மார்ச் 16

  • டேவான் வெண்ணிலா கோத்தா கெமுனிங்

  • https://g.co/kgs/pRJLjLg

  1. மண்டலம்  – 13 & 14 எம்பிஎஸ்ஏ

  • மார்ச் 23

  • டேவான் எம்பிஎஸ்ஏ அஸ்தார், புக்கிட் ரிமாவ்

  • https://g.co/kgs/x6D1zT1

  1. மண்டலம்  - 9 & 14 எம்பிஎஸ்ஏ

இந்த வாய்ப்பை தவறவிடாமல், பொதுமக்கள் சுகாதார கர்னிவலில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப் படுகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.