ECONOMY

மலேசியாவின் சிறந்த மின் வணிகர் (டாப் ECM) விருது ஒன்பதாவது முறையாக தொடர்கிறது

22 பிப்ரவரி 2024, 1:11 PM
மலேசியாவின் சிறந்த மின் வணிகர் (டாப் ECM) விருது ஒன்பதாவது முறையாக தொடர்கிறது

 ஷா ஆலம், பிப் 22: சிலாங்கூர் டிஜிட்டல் பொருளாதாரத் தகவல் தொழில்நுட்பக் கழகம் (சிடேக்) ஏற்பாடு செய்துள்ள மலேசியாவின் சிறந்த மின் வணிகர் (டாப் ECM) விருது, RM100,000 மதிப்புள்ள பரிசுகளுடன் ஒன்பதாவது முறையாகத் தொடர்கிறது.

தொழில்முனைவோரை அங்கீகரிப்பதற்காக 2016 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டு பிப்ரவரி 29 அன்று பதிவு முடிவடைகிறது என்று சிடேக்கின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சில புதிய கூறுகளைச் சேர்த்ததாக யோங் காய் பிங் விளக்கினார். இதன் மூலம், அவர்களின் வணிகத்தை மேம்படுத்த முடியும்.

"ஸ்ட்ரீமிங் நுட்பங்கள், AI (செயற்கை நுண்ணறிவு) உள்ளடக்க உருவாக்கம், சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் தொழில்துறை வகைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் வழி, பங்கேற்பாளர்கள் அனுபவத்தையும் அறிவையும் பெறலாம், "என்று அவர் இன்று சிறந்த ECM 2024 இன் தொடக்க விழாவில் கூறினார்.

அப்பின் பேங்(Affin Bank) தொடர்ந்து ஐந்தாவது முறையாக முக்கிய ஸ்பான்சராக அதன் உறுதிப்பாட்டை தொடர்கிறது. மேலும், இந்த முறை Lazada, Razer Merchant Service மற்றும் Shopline ஆகியவற்றுடன் மூலோபாய ஒத்துழைப்பு நிறுவப்பட்டது.

"இந்த விருது பொருளாதார வளர்ச்சியில் ஒரு தளமாக செயல்படுகிறது. இது தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்" என்று அவர் கூறினார்.

பதிவு பற்றிய கூடுதல் தகவல்களை https://www.sidec.com.my/topecm/ என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.