NATIONAL

கோல சிலாங்கூரில்  மடாணி மத்திய மண்டல குடிமக்கள் திட்டத்தில் பல அரசாங்க பதிவு சேவைகள் மற்றும் கழிவுகள் கிடைக்கும்

22 பிப்ரவரி 2024, 3:44 AM
கோல சிலாங்கூரில்  மடாணி மத்திய மண்டல குடிமக்கள் திட்டத்தில் பல அரசாங்க பதிவு சேவைகள் மற்றும் கழிவுகள் கிடைக்கும்

கோலாலம்பூர், பிப் 22: வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மடாணி மத்திய மண்டல குடிமக்கள் திட்டத்தில்  பற்பல  அரசாங்க சேவைகளுக்கு பதிந்து கொள்ளும் வாய்ப்புடன், தள்ளுபடி விலையில்  முக்கிய உணவு பொருட்கள் விற்கப்படுவது டன்  தனியார் அல்லது வணிக நோக்கங்களுக்காக மலேசிய ஓட்டுநர் உரிமம் (LMM), மோட்டார் சாலை வரி மற்றும்  போக்குவரத்து  குற்ற  அபராதங்களுக்கு கழிவும்  பெறப்படும்  வாய்ப்பை  பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோலா சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் சாலைப் போக்குவரத்துத் துறையின் நடமாடும் சேவையின் (ஜேபிஜே) மூலம் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இத்திட்டம் நடைபெறும் காலம் முழுவதும் ஜேபிஜே நடமாடும் சேவையில் தடுப்பு பட்டியலில் உள்ள வழக்குகளை தவிர, பொதுமக்கள் சம்மன்களைச் செலுத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்களுக்குப் பொதுமக்கள் http://www.malaysiamadani.gov.my என்ற இணையதளத்தை நாடவும்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.